வில்லியனுார் பைபாஸில் புதியதாக அமைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் வெண்கல சிலையை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.
புதுச்சேரி வில்லியனுார் மூலக்கடையில் எம்.ஜி.ஆர்., சிலையை, கடந்த 1996ல் அப்போதைய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.வில்லியனுார் பைபாஸ் அமைக்கப்பட்டதால், போக்குவரத்து இடையூறாக இருந்த எம்.ஜி.ஆர்., சிலை அகற்றப்பட்டது. தற்போது பைபாசில் விநாயகர் கோவில் அருகில் புதிய எம்.ஜி.ஆர்., சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாரானது.
இந்த நிலையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு வெண்கல எம்ஜிஆர் சேலையை திறந்து வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி னார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், எம்ஜிஆர் வெண்கலை சிலையை அமைக்க உறுதுணையாக இருந்த புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்தார். எம்ஜிஆர் சிலையை திறப்பதற்கு தடையாக இருந்த ஓபிஎஸ் அணியினர், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க தகுதியற்றவர்கள் என்றும், பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்ட பிறகுதான் அவர்கள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments